பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்! - காடேஸ்வரா சுப்பிரமணியம்
Jul 10, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்! – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Web Desk by Web Desk
Dec 30, 2024, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தக்க ஏற்பாடுகளைச் செய்வதில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்  என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர் மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயம்.

பழனிக்கு பல லட்சம் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வதுபோல திருச்செந்தூருக்கும் முருக பக்தர்கள் ராஜபாளையம், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் இருந்து செல்கிறார்கள்.

திருச்செந்தூர் பாத யாத்திரை பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்த திட்டம் செயல்படுத்த துவங்கி ஆண்டுகள் பல ஆன பின்னரும் அதனைச் இன்னும் நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது தமிழக அரசு.

இதுவரை பாதை போடப்பட்ட வழிகளிலும் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. அந்த பகுதியில் மலம், சிறுநீர் கழித்து அசுத்தம் படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் காரணமாக விபத்தில் சிக்கும் சூழல் உருவாகிறது.

தமிழக அரசு வேற்று மதத்தினர் வெளிநாடு யாத்திரை செல்ல நிதி உதவி அளிப்பதுடன், வழி அனுப்பி வைக்க விமான நிலையம் வரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரிசைகட்டி நிற்பதை பார்க்கிறோம். அவர்கள் தங்குவதற்கு பல இடங்களில் தங்கும் விடுதிகள் மக்கள் வரிப்பணத்தில் ஏற்பாடு செய்து வைத்து தமிழக அரசு பராமரிக்கிறது.

ஆனால் தமிழர்கள் தங்கள் தெய்வத்தை வழிபட சொந்த மாநிலத்தில் நடந்து செல்வதற்குத் கூட எந்த வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்வதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

பல நாட்கள் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், குளிப்பதற்கும், ஓய்வு எடுக்கவும் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை ஆகும்.

ஆனால் தமிழக இந்து சமய அறநிலையத் துறை உலக முருக பக்தர்கள் மாநாடு என்று கோவில் நிதியில் நடத்தியதை பெருமை பேசுகிறது.

தமிழகத்திற்கு என்று சில விசேஷமான ஆன்மிக செயல்பாடுகள் இருப்பது தனித்துவமானது. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது விரதம் இருந்து பாத யாத்திரை செல்லும் நிகழ்வாகும்.

எனவே பாதயாத்திரை செல்ல தனி வழி அமைக்கும் திட்டத்தை விரைந்தும், தரமாகவும் முடிக்க வேண்டும்.

இரவு நேரங்களில் , விடியற்காலை நேரங்களில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஒளிரும் உடை மற்றும் ஆங்காங்கே தற்காலிக ஓய்வுக் குடில், கழிப்பறைகள், குளியலறைகள் முதலானவற்றை ஏற்படுத்தித் தர தமிழக அரசையும் இந்து சமய அறநிலையத் துறையையும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: hindhu munaniThe Tamil Nadu government should focus on the safety of pilgrims! - Ghadeswara Subramaniamthe safety of pilgrims
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

Next Post

புத்தாண்டையொட்டி ஹிமாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

திருவண்ணாமலையில் 650 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி – நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்!

குமுளியில் அலுவலக பணியில் இருந்த அரசு ஊழியர் மீது தாக்குதல்!

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிக்கிறது – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

செஞ்சி அருகே முதல்வரால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டிக்கிடக்கும் அவலம்!

அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

சாத்தூரில் வைகோ உத்தரவின் பேரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் – மதிமுகவினர் அராஜகம்!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies