புத்தாண்டையொட்டி இமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புத்தாண்டு பிறக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியான இமாச்சல பிரதேசம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. இதனால் அங்குள்ள ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன.
சந்தைப் பகுதியிலும் கடை வீதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு விருப்பமான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.