தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பிற்பகல் 1 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தனக்கு வேதனை அளிப்பதாக கூறிய தவெக தலைவர் விஜய், ஆட்சியாளர்களிடம் முறையிட்டு எந்த பயனும் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பிற்பகல் ஒரு மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை விஜய் சந்திக்கவுள்ளார்.