அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த குழுவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சென்னை வந்துள்ள இக்குழுவினர் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரது குடும்பத்தினரையும் உண்மை கண்டறியும் குழு சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.