புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அலகு குத்தியும், காவடி சுமந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அதிகளவு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.
சில பக்தர்கள் 3 அடி முதல் 21 அடி நீளம் வரையிலான அலகுகளை குத்தி வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனிடையே, புத்தாண்டன்று நள்ளிரவு 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.