திருச்சியில் சர்வீஸ் சாலைக்கான பணிகளை துரிதப்படுத்துவேன் என்ற தேர்தல் வாக்குறுதியை அமைச்சர் அன்பில் மகேஸ் நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலையில், சர்வீஸ் சாலைக்கான பணிகளை துரிதப்படுத்துவேன் என கடந்த தேர்தலின்போது அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அன்பில் மகேஷ் வாக்குறுதி அளித்தார்.
ஆனால் தற்போது அமைச்சராக பதவியேற்ற பின்பும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சிரமத்திற்கு உள்ளான அப்பகுதி மக்கள், சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.