ஏற்காட்டில் மீண்டும் கடும் பனிமூட்டதுடன் கூடிய சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த வாரம் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்ததால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். கடந்த ஓரிரு நாட்களாக பனிமூட்டம் விலகி மழை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே பயணித்தனர்.