சென்னை மாநகராட்சியில் தொடர் புகாருக்கு உள்ளான திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் சாலை அமைப்பு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என கவுன்சிலர்கள் மீது தொடர்ந்து புகார் எழுந்தன.
இதுதொடர்பாக சிறப்பு நுண்ணறிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுகவை சேர்ந்த 4 கவுன்சிலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.