தென்காசி மாவட்டம் மேலகரத்தில் சுடுகாட்டை சுற்றிலும் குப்பைகள் குவிந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலகரம், நன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், மேலகர பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
குப்பை கிடங்குக்கு அருகிலேயே உடல்களை எரியூட்டும் தகன மேடையும் அமைந்துள்ளது. இந்த நிலையில், தகன மேடையை சுற்றிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. மேலும், அருகிலுள்ள வாய்க்காலிலும் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.