சான்றோர், ஆன்றோர்களின் அடையாளங்களை அழிக்க திமுக முயற்சி! : எச்.ராஜா குற்றச்சாட்டு
Aug 15, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சான்றோர், ஆன்றோர்களின் அடையாளங்களை அழிக்க திமுக முயற்சி! : எச்.ராஜா குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Dec 31, 2024, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் வளர்த்த சான்றோர்கள், அறம் வளர்த்த ஆன்றோர்கள் அனைவரின் அடையாளங்களையும் அழிக்க திமுக முயல்வதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி இனி திருவள்ளுவரின் சிலையை “பேரறிவு சிலை” என அனைவரும் அழைக்க வேண்டுமென, திருவள்ளுவரின் நெற்றியில் இருந்து திருநீரை அழித்த திராவிட மாடல் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை காட்டு மிராண்டிகள் என்றும், தமிழை காட்டுமிராண்டி மொழி எனவும் ஏளனம் செய்து தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரத்தை நாத்திகம் என்கிற பெயரில் சீரழித்து திருக்குறளை கேவலமாக விமர்சித்த ஈவெரா சிலையை “பேரழிவு சிலை” என அழைக்கக் கூறுவாரா முதல்வர் ஸ்டாலின் என்றும் அவர் வினவியுள்ளார்.

வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு என தமிழர்கள் அனைவரும் பெருமிதம் கொள்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வள்ளுவப் பெருந்தகையின் பெயரை வருங்கால சந்ததிகளின் சிந்தனைகளுக்கும், செவிகளுக்கும் எட்டாமல் இருட்டடிப்பு செய்யும் சதியோ முதல்வர் ஸ்டாலினின் கூற்று என்கிற ஐயம் அனைவருக்கும் எழுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

வள்ளுவரின் நெற்றியிலிருந்தும்,
வள்ளலாரின் நெற்றியிலிருந்தும்,
ஒளவையாரின் நெற்றியிலிருந்தும்,
திருநீறை அழித்த திராவிட மாடல் தீய சக்திகள், தமிழ் வளர்த்த சான்றோர்கள், அறம் வளர்த்த ஆன்றோர்கள் அனைவரின் அடையாளங்களையும் அழிக்க திட்டமிட்டு அவர்களின் திருப்பெயரையும் அழிக்க முயல்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக அவர் கூறியுள்ளார்.

திருக்குறள் “பேரறிவு” என்பதில் மிகையேதும் இல்லை என்று கூறியுள்ள ஹெச்.ராஜா, ஆனால் திராவிடம் “பேரழிவு” என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், தமிழ் வாழ வேண்டுமானால் திராவிடம் அஸ்தமனமாக வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags: DMK's attempt to destroy the identity of witnesses and others! : Accusation of H. Raja
ShareTweetSendShare
Previous Post

RSS-ன் முயற்சியால் வெள்ளி விழா காணும் திருவள்ளுவர் சிலை!

Next Post

16 கிலோ மெத்தப் பெட்டைமின் பறிமுதல்!

Related News

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies