சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தப்பெட்டைமின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை மாதவரம் அருகே கடந்த 21ஆம் தேதி மெத்தபெட்டைமின் போதைப்பொருளை கடத்தி வந்த கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ மெத்தப்பெட்டைமின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து இருவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தற்போது மாதாவரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ மெத்தபெட்டைமின் போதைப்பொருள் சிக்கியுள்ளது.
போதைப்பொருளை கடத்தியதாக 5 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் அதிக அளவு மெத்தப்பெட்டைமின் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றும், இந்த மெத்தபெட்டைமின் போதைப்பொருள் மணிப்பூரிலிருந்து வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்யப்படுவதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.