சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதித்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் கிராம மக்கள் வளர்ச்சியடைந்து வருவதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
சுக்மா மாவட்டத்தில் உள்ள புவர்த்தி கிராமம் நக்சல் கட்டுப்பாட்டில் இருந்த விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த கிராமத்திற்கு அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இந்நிலையில் நக்சல் பாதித்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்தார். மேலும், செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் விரும்பவில்லை என அவர் கூறினார்.