அலிகான் துக்ளக் ஜாமின் மனு தள்ளுபடி!
Aug 19, 2026, 11:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலிகான் துக்ளக் ஜாமின் மனு தள்ளுபடி!

Murugesan M by Murugesan M
Dec 31, 2024, 11:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கின் ஜாமின் மனுவை, சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், போதைப்பொருள் வழக்கில் தொடர்பிருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்-கை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அலிகான் துக்ளக் தரப்பில் ஏற்கெனவே அம்பத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஜாமின் கோரி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தான் கைது செய்யப்பட்டபோது தன்னிடம் போதைப்பொருட்கள் எதுவும் இல்லை எனவும், இவ்வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அலிகான் துக்ளக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தனக்கு ஜாமின் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனு, நீதிபதி கோவிந்தராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் விசாரணை நடந்து வருவதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அலிகான் துக்ளக்கின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Tags: Alikhan Tughlaq Jamin's plea dismissed!
Share
Tweet
SendShare
Previous Post

செல்லப் பிராணிகள் விற்பனையகத்தில் சோதனை!

Next Post

நடிகர் சூரியின் உணவகத்திற்கு சிக்கல்!

Related News

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

பால் கொள்முதல் விலை உயர்வு, எம்எல்ஏக்களுக்கு கார் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies