கன்னியாகுமரி கடலில் அலைகள் அதிகரித்து காணப்படுவதால் படகு சேவை ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் அதிகாலை முதல் காற்றுடன் மழை பெய்வதால் சர்வதேச சுற்றுலா தலத்தில் சூரிய உதயத்தை காணவந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும், கன்னியாகுமரி கடலில் அலைகள் அதிகரித்து காணப்பட்டதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் படகு சேவை ரத்து செய்யப்பட்டதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் விதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை கண்டு ரசிக்க முடியாதது ஏமாற்றமளிக்கிறது என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.