வேட்டி வாரத்தை முன்னிட்டு 695 ரூபாய்க்கு மேட்சிங் வேட்டி சட்டைகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்திய கலாச்சார உடையான வேட்டி சட்டைகளை இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் வகையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் பல்வேறு வகையான வேட்டி சட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் 7ம் தேதி வரை வேட்டி வாரத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டு வேட்டி வாரத்தை முன்னிட்டு 695 ரூபாய்க்கு மேட்சிங் வேட்டி சட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 கண்கவர் வண்ணங்களில் வேட்டி-சட்டைகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் ஈஸ்வர் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜன், கடந்த 8 ஆண்டுகளாக வேட்டி வாரத்தை சிறப்பாக கொண்டாடி வருவதாக தெரிவித்தார். தற்போது அறிமுகம் செய்துள்ள ஆடை, லாப நோக்கமின்றி வழங்கப்படுவதாக கூறிய அவர், வேட்டி வாரத்தை இளைஞர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.