புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறையில் நான்கு Anti Romeo பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு பணிகள் குறித்து காவல்துறையின் ஆலோசனை கூட்டம் ஐஜி அஜித்குமார் சிங்களா தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சத்தியசுந்தரம், புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறையில் நான்கு Anti Romeo பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் சாதாரண உடைகளில் மக்களுடன் மக்களாக கலந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.