சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன், அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
முதுவன் திடல் கிராமத்தைச் சேர்ந்த செண்பகராஜ் என்பவரின் 14 வயது மகன் சந்துரு, திருப்புவனம் இந்திரா நகரில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அரையாண்டு விடுமுறைக்காக சென்றிருந்தார்.
அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன், மழை பெய்து ஈரமாக இருந்த சாலையில் வழுக்கி விழுந்து, அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.