பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன்முதலாக புத்தாண்டு பிறந்தது.
உலகம் முழுவதும் 2025 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக இன்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளிலும் வித்தியாசமான முறைகளில் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
புதிய காலண்டரை மாற்றுவதாக மட்டுமல்லாமல் புதிய இலக்குகள், புதிய பயணங்களுக்கு வாய்ப்பாக புத்தாண்டு அமையும் என பலரும் கருதுகின்றனர்.
அந்தவகையில், உலகிலேயே முதன்முதலாக டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் 2025 புத்தாண்டு பிறந்தது. இதனையொட்டி லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.