வணிக அடிப்படையில் விளம்பர பதிவுகளை வெளியிடுவது கண்டறியப்பட்டால், கிரிமினல் வழக்கு போடுவோம் என எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் சமூகவலைதள நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த 2022ம் ஆண்டு சொந்தமாக்கி கொண்டார். அன்றைய தினத்தில் இருந்து, பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழலில், அதிக பின்தொடர்வோர் இருக்கும் எக்ஸ் பக்கங்களை விலைக்கு வாங்கி, அதன் மூலம் வணிக அடிப்படையில் விளம்பர பதிவுகளை வெளியிடுவது கண்டறியப்பட்டால், கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.