திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னூர் குத்பிஷா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பகுதியில் சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.