சென்னையில் 100 வயதை கடந்த மூதாட்டியின் பிறந்த நாளை 5 தலைமுறை சொந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மதுரையில் பிறந்த சீனியம்மாள் தற்போது சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகன்கள், மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளனர். தற்போது சீனியம்மாளுக்கு வயது 100.
இதனையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் சீனியம்மாளின் நூறாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், மூதாட்டியின் மகன்கள், மகள்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரன்கள் என 5 தலைமுறை சொந்தங்கள் பங்கேற்று மூதாட்டிக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், மூதாட்டியிடம் ஆசியும் பெற்றனர். நூறு வயது ஆனாலும், தனது அன்றாட பணிகளை யார் உதவியும் இன்றி அவரே செய்துகொள்வதாக உறவினர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.