சீனாவுடன் தைவானை இணைப்பதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடலில் தீவாக இருக்கும் தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி சீன அதிபர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தைவானில் உள்ள மக்களும் சீன மக்களும் ஒரே குடும்பம் எனவும் தங்கள் ரத்த உறவுகளை யாராலும் துண்டிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். எனவே தாய்நாட்டுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைவதற்கான வரலாற்றுப் போக்கை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.