ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காததால் ஏற்பட்ட விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆலங்குளத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வழக்கம் போல் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்றது. அப்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அந்த பேருந்து முதுகுளத்தூர் நோக்கி சென்ற மற்றொரு அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.