மத்திய அரசின் பாஷினி திட்டத்துடன், தமிழக அரசு இணைந்து செயல்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஷினி திட்டத்துடன் இணைந்து ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பிரதமர் மோடியின் உரைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.