கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பழுது பார்க்கும் போது திடீரென மயங்கி மின்மாற்றிலேயே மின்வாரிய ஊழியர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம். குன்னத்தூர் கிராமம் அருகே பழுது ஏற்பட்ட மின்மாற்றியில் ஏறி மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது ஏழுமலை என்ற ஊழியர் மின்கம்பத்தில் மயங்கி அந்தரத்தில் தொங்கினார்.
சக ஊழியர்கள் ஏழுமலையை உடனடியாக மீட்டனர். நல்வாய்ப்பாக அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.