குடியரசு தினத்தையொட்டி கடும் பனியிலும் டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தினத்தன்று டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதனை முன்னிட்டு டெல்லி கடமைப் பாதையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.