கீழடி அருங்காட்சியகத்தை கடந்த 20 மாதங்களில் ஆறரை லட்சம் பேர் கண்டு ரசித்து சென்றுள்ளனர்.
திருப்புவனம் அருகேவுள்ள கீழடி கிராமத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய செங்கல் கட்டுமானம், தந்த சீப்பு, பானை குறியீடுகள், பாசிகள், பவளங்கள், தங்க காதணிகள் என ஏராளமான பண்டைய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த பொருட்கள் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் அறிந்துகொள்ளும் வகையில், விளக்கப்படம் மற்றும் அனிமேஷன் காட்சிகளுடன் மெகா சைஸ் டிவிக்களில் தொடர்ச்சியாக ஒளிபரப்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தை கடந்த 20 மாதங்களில் ஆறரை லட்சம் பேர் கண்டு ரசித்து சென்றுள்ளனர். தற்போது 10 ஆம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
















