பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையை ஒட்டி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலப்பாதையில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக படிவழிப் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றி கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.