நெல்லையில் உள்ள பூமிநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வீரவநல்லூரில் அமைந்துள்ள பூமிநாத சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். 14 ஆண்டுகளுக்கு முன் பழுதான தேர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.