அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரான நடிகர் சூரியின் காளைக்கு தீபாரதனை எடுத்து அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.
மதுரையைச் சேர்ந்த நடிகர் சூரி, தான் வளர்க்கும் காளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்ட தனது காளையை நடிகர் சூரி, பாரம்பரிய உடையில் அழைத்து வந்தார்.
அப்போது, காளைக்கு அவரது குடும்பத்தினர் தீபாரதணை காண்பித்து வரவேற்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.