பொங்கல் பண்டிகையையொட்டி புவிசார் குறியீடு கொண்ட ஆத்தூர் வெற்றிலை வெளி மாவட்டங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், செழித்து வளர்ந்த வெற்றிலைகள் அறுவடை செய்யப்பட்டு, ஆத்தூர் வட்டார வெற்றிலை வியாபாரிகள் சங்கத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு தரம் பிரிக்கப்பட்டது. பின்னர் அவை, சென்னை, கோவை, திருப்பூர், மதுரை மற்றும் கர்நாடாவில் உள்ள பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.