சேலத்தில் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பாஜக இளைஞர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சேலம் மாநகர மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பாக, ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது