உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நாளை தொடங்க உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
மகா கும்பமேளா நாளை தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 40 கோடி பேர் கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.