சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, விவேகானந்தர் நினைத்த வழியில் தேசம் உருவாகி வருவதாக தெரிவித்தார்.
சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் தேசிய இளைஞர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த விவேகானந்தரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சுவாமி விவேகானந்தரின் வரலாறு என்றும் மறையாது என தெரிவித்தார். கன்னியாகுமரி பாறை மீதான விவேகானந்தரின் தியானம் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்ததாக கூறிய ஆளுநர் ரவி, அவர் நினைத்த வழியிலேயே தேசம் உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.