திருப்பூர் மாவட்டத்தில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த வங்கதேசத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஏராளமான வங்கதேச இளைஞர்கள் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வருவதாக, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பல்லடம் அருகே உள்ள அருள்புரம், செந்தூரன் காலனி பகுதிகளில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, போலி ஆதார் அட்டைகளை கொடுத்து பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 31 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.