இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள வி.நாராயணன், கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய தலைவராக வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன், நாளை மறுநாள் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி கோயிலில் வி.நாராயணன் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகவும் முக்கியமான பொறுப்பை பிரதமர் மோடி தமக்கு வழங்கியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பிரதமர் மோடியுடன் இணைந்து பாடுபடுவேன் எனவும் அவர் கூறினார்.