கோவையில் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சின்னவேடம்பட்டியில் உள்ள கௌமார மடாலயத்தில் 1 மணி நேரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுழற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வி.ஆர்.சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 73 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் சைக்கிள் ஓட்டிக் கொண்டே இரு கைகளிலும் மாறி மாறி சிலம்பம் சுழற்றியது காண்போரை பிரமிக்கச் செய்தது. சாதனையை எட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து கைதட்டி உற்சாகப்படுத்தினர். பின்னர் உலக சாதனையை நிகழ்த்திய அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் சான்றிதழும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.