திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சாலையோர கடைகளை அகற்றிய அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளி கணவருடன் பெண்மணி போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீதிமன்றம் உத்தரவின் படி சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடையை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளி கணவருடன் பெண்மணி போராட்டத்தில் ஈடுபட்டார்.