மகா கும்பமேளா திருவிழா தொடங்கியதை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மகா கும்பமேளா திருவிழாவை முன்னிட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்.