சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் போகிப் பண்டிகையை கொண்டாடினர். சென்னையில் சராசரியாக 79 அளவாக காணப்படும் காற்றின் மாசு, நள்ளிரவு பெய்த மழை காரணமாக 66ஆக பதிவாகி உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ஆலந்தூரில் 72 ஆகவும் , பெருங்குடியில் 71 ஆகவும் , அரும்பாக்கத்தில் 70 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவையில் 60 ஆகவும், கடலூரில் 82 ஆகவும் , மதுரையில் 61ஆகவும் காற்று தரக் குறியீடு பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.