கார் பந்தயத்தில் வெற்றிபெற்ற நடிகர் அஜித்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எடுத்துக்கொண்ட ஒவ்வொரு விஷயத்திலும் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறார் அஜித்குமார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், அஜித்குமாரின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் மற்றவர்களை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ள அண்ணாமலை, கார் பந்தயத்தில் 3ம் இடம் பிடித்து அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.