எல்லையில் முள்வேலி அமைத்த விவகாரத்தில் இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து வங்கதேசம் கவலை தெரிவித்தது.
இந்தியா, வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வங்கதேச வெளியுறவு அமைச்சக செயலர் முகமது ஜஷீம் உதீன், அந்நாட்டுக்கான இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து ஆட்சேபம் தெரிவித்தார்.
எல்லையில் இந்தியா வேலி அமைப்பதால் பதற்றம் நிலவுவதாக கவலை தெரிவித்த முகமது ஜஷீம் உதீன், அங்கு குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் வங்கதேச அரசு தடுக்கும் என உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தூதர் பிரணாய் வர்மா, இருநாடுகளின் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளதாகவும், அப்போது இந்தப் பிரச்னை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.