80 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அழகர் அணை திட்டத்தை, தமிழக அரசு உடனடி கொண்டு வர வேண்டுமென தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியாபட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, தமிழக அரசு அழகர் அணை திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதால் தென் மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக தெரிவித்தார். மேலும் அச்சங்கோவில் பம்பை ஆற்றையும், வைகை ஆற்றோடு இணைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.