சீனாவில் HMPV தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் HMPV வைரஸ் தொற்று பரவல் அதிகரித்த நிலையில், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை HMPV தொற்று அதிகமாக பாதித்த நிலையில், தற்போது அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.