பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள பாலாறு-பொருந்தலாறு அணை தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.
பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், அணையில் இருந்து தண்ணீரை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து மே 3ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கூறினார். நீர்திறப்பு மூலம் 16 கிராமங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளதாக தெரிவித்தார்.