பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளம், மகிழ்ச்சி வழங்கட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழக சகோதர சகோதரிகளுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பைக் கொண்டாடுவதன் மூலம் அனைவருக்கும் வளம், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்விற்கான ஆசீர்வாதங்களை இத் திருநாள் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.