நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியது.
பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அப்போது சுற்றுலாத் துறை சார்பில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில், உறியடி, இசை நாற்காலி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும், படுகர் இன மக்களின் நடன நிகழ்ச்சியையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.