திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா ஆயில் விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானலை சேர்ந்த குணசேகரன், அவரது தம்பி சரவணன் குமார் ஆகியோர் அப்பகுதியில் காளான் மற்றும் கஞ்சா ஆயில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதையறிந்த போலீஸார் சகோதரர்கள் இருவர் மற்றும் அவர்களிடம் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய ஒருவர் என மொத்தம் மூன்று பேரை கைது செய்தனர்.
















