நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பரமத்தி வேலூரை அடுத்த இருகூர் வழியாக ஆட்சியர் சென்றபோது செளந்தரராஜன் என்ற இளைஞர் சாலை விபத்தில் காயம் அடைந்து துடித்துக் கொண்டிருந்தார்.
உடனே மாவட்ட ஆட்சியர் உமா அந்த இளைஞருக்கு உதவிகளை மேற்கொண்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் காயம் அடைந்த இளைஞருக்கு உடனடியாக உதவிகளை மேற்கொண்ட ஆட்சியர் உமாவுக்கு பாராட்டு குவிந்தது.