திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் காப்புக்காட்டில் வனத்துறைக்கு உட்பட்ட விவசாய நிலத்தில் கட்டுக் கம்பிகளை கட்டி வைத்ததால், விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கொத்தூர் காப்புக்காடு பகுதியில் விவசாயம் செய்து வரும் சிலர், வன விலங்குகள் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி, கட்டுக் கம்பிகளை அமைத்தனர். இதனை அறிந்த வனத்துறையினர், விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த மூன்று விவசாயிகளுக்கும் ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.